in

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் காதர் மொய்தீன் பேட்டி


Watch – YouTube Click

ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறுவார் – திருச்சியில் வாக்களித்த பின் காதர் மொய்தீன் பேட்டி

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் திருச்சி காஜாமலை அருகே உள்ள காஜாமியான் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய காதர் மொய்தீன்,

இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40 இடங்களில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெறும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனிக்கும் எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கும் கடுமையான போட்டி நிலவுகிறதா என்கிற செய்தியாளர்கள் கேள்விக்கு தேர்தலில் எளிமையான போட்டி கடுமையான போட்டி என்றெல்லாம் இல்லை. போட்டி தான் இதில் நவாஸ் கனி கடந்த ஐந்தாண்டுகளில் ஜாதி, மதம் கடந்து அனைத்து தரப்பு மக்களின் ஆதரவை பெற்றுள்ளார். மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளார். அவர் நிச்சயம் 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளில் வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

அதிமுகவின் முன்னாள் எம்பி ப.குமார் வாக்கு பதிவு செய்ய மறுத்து வெளிநடப்பு

பாளையங்கோட்டை 61 வது பூத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் ஆய்வு