🙏🌺 நாமக்கல் ஸ்ரீ ராஜேஸ்வரி மடாலயத்தில் லலிதா சகஸ்ரநாம யாகம்!
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேட்டை ஸ்ரீ பரிமள ராஜராஜேஸ்வரி மடாலயத்தில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு நவராத்திரி விழாவின் நிறைவு நாளினை முன்னிட்டு வெள்ளிக்கிழமை 23.10.26 இராஜராஜேஸ்வரி அம்மன் லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ர நாமம் யாகம் சிறப்பாக நடைபெற்றது.
அப்போது ஆலயம் முழுவதும் வர்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காலை கலசம் ஸ்தாபிக்கப்பட்டுஇராஜராஜேஸ்வரி அம்மன் லலிதா ரஹஸ்ய ஸஹஸ்ர நாமம் யாகம் சிறப்பாக நடைபெற்று யாகவேள்வியில் 11 மகளீர்கள் அமர்ந்து மந்திரங்கள் கூறி சமித்துக்கள் சமர்ப்பிக்கப்பட்டு மகா பூர்ணகுதிகள் யாக வேள்வியில் சமர்ப்பிக்கப்பட்டது.
யாக வேள்வி முடிந்தவுடன் ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு முன்பு உள்ள மகாமேரு ஸ்ரீ சக்கரத்திற்கு பல வகையான வாசனை திரவியங்களால் பால் தயிர் பஞ்சாமிர்தம் கனி வர்க்கங்கள் உடன் இறுதியாக கலச அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து மாலை மூலவர் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய் செய்யப்பட்டு 108 அஷ்டோத்திர நாமாவளிகள் கூறி உதிரிப்பூ அர்ச்சனை செய்து அடுக்காரத்தி, நாகாரத்தி, கும்ப ஆரத்தி, ஏகாரத்தி, பஞ்சாரத்தி உடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடை, சாமரம், விசிறி, கண்ணாடி போன்ற மங்கல பொருட்களினால் சோடச உபச்சாரம் செய்யப்பட்டது. அவனைத் தொடர்ந்து ஆலயத்தில் சுமங்கலி மற்றும் குழந்தைகளுக்கு பூஜைகள் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும்அருட் பிரசாதம் மஹா அன்னதானமும் வழங்கப்பட்டது.


