in

பாளையங்கோட்டை 61 வது பூத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் ஆய்வு


Watch – YouTube Click

பாளையங்கோட்டை 61 வது பூத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் ஆய்வு

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு காலை 7.00 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் காலை முதலே வாிசையில் நின்று தங்கள் ஜனநாயகக்கடமையை செய்ய காத்திருந்தனா். பாளையங்கோட்டை 61 வது பூத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் ஆய்வு செய்தாா்.
முன்னாள் சபாநாயகரும் திமுக கிழக்கு மாவட்ட நெல்லை செயலாளர் ஜெயேந்திரா பள்ளியில் இன்று காலை தனது வாக்கினை பதிவு செய்தார்.

பாளை ஜான்ஸ் மேல்நிலை பள்ளியில் நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று வரிசையில் நின்று வாக்களித்தார். தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனரும் தென்காசி தொகுதி நாளுமன்ற வேட்பாளர் ஜான்பாண்டியன் திருநெல்வேலியில் தனது வாக்கினை பதிவு செய்தார். திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தனது வாக்கினை பதிவு செய்தாா். அதேபோல் நெல்லை மாநகா் பேட்டை புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் பாளையங்கோட்டை திமுக எம்எல்ஏ அப்துல் வஹாப் தனது வாக்கை பதிவு செய்தார்.

காலை 9 மணி வரை ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் 11.8.2% திருநெல்வேலியில் 6.72 சதவீதமும் அம்பாசமுத்திரத்தில் 12.13 சதவீதமும் பாளையங்கோட்டையில் 10 புள்ளி 5 சதவீதமும் நான்கு நேரில் 9.5 சதவீதமும் ராதா படத்தில் 7.6 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது


Watch – YouTube Click

What do you think?

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் காதர் மொய்தீன் பேட்டி

தேர்தலை புறக்கணித்து வீட்டுக்கு வீடு கருப்பு கொடி ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது