ஐப்பசி மாத கந்தசஷ்டி திருவிழா
வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஐப்பசி மாத கந்தசஷ்டி திருவிழா கோலாகலமாக துவங்கியது.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற குடவரை கோவிலான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஐப்பசி மாதத்தை முன்னிட்டு கந்தசஷ்டி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக அதிகாலை கோவில் நடைதிறக்கப்பட்டுசிறப்பு பூஜை நடத்தபட்டது பின்னர் கொடி பட்டம் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பால் தயிர் சந்தனம் விபூதி தேன் உள்ளிட்ட நவ திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வள்ளியூர் சாமி தரிசனம் செய்தனர்.
10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் கந்த சஷ்டி விழாவில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

முக்கிய நிகழ்வான எட்டாம் திருவிழா முன்னிட்டு வரும் 15ம்தேதி ஞாயிற்றுக்கிழமை கந்தசஷ்டி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
அன்று அதிகாலை சண்முகர் வெள்ளை சாத்தி எழுந்தருளலும், மாலை 4 மணிக்கு பச்சை சாத்தி எழுந்தருளலும் நடைபெற்று, இரவு தாரகன் வதம் எனும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தொடர்ந்து (நவம்பர் 20) வெள்ளிக்கிழமை இரவு திருக்கோவில் மண்டபத்தில் சுவாமி அம்பாள் மாலைமாற்றி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

