வண்ணமயமாக ஒளிரும் வானம், திண்டுக்கல் தீபாவளி கொண்டாட்டம்
வானவேடிக்கையால் வண்ணமயமாக ஒளிரும் வானம், திண்டுக்கல் தீபாவளி கொண்டாட்டம்.
இன்று நவம்பர் 8 ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் அனைவரும் தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
தீபாவளி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவு வருவது பட்டாசு தான். அதிலும் வானவேடிக்கை என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று வான வேடிக்கை தான்.
பகல் முழுவதும் அதிக சத்தம் எழுப்பும் வெடிகளை வெடிப்பவர்கள் இரவு நேரத்தில் கண்களுக்கு விருந்தளிக்கும் வான வேடிக்கை, பூந்தொட்டி, மத்தாப்பு என பல வண்ணங்களில் மின்னும் வெடிகளை தான் வெடிப்பர்.
குறிப்பாக மற்ற வெடிகளை போல அதிக சத்தம் எழுப்பாமல் திரியை பற்ற வைத்தால் ராக்கெட் போல வானத்தில் பறந்து பல வண்ணங்களில் மின்னும் நட்சத்திரங்கள் வெடித்து சிதறுவது போல தீப்பொறிகள் சிதறுவதை பார்ப்பவர்களின் மனதில் ஒருவித மகிழ்ச்சியே தோன்றும்.
வானவேடிக்கை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு பட்டாசு வகையாக உள்ளது.

வெடி வெடிக்க பிடிக்காதவர்கள் கூட வானத்தில் பல வண்ணங்களில் வெடித்துச் சிதறும் வானவேடிக்கையை கண்டு ரசிப்பார்கள்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பகல் முழுவதும் வெடி வெடித்து தீர்த்தவர்கள், தற்பொழுது இரவு நேரத்தில் வான வேடிக்கைகள் விடும் காட்சி கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளது.
பகல் முழுவதும் பலகாரம், சமையல் வேலை செய்து கலைத்தவர்களும், வெடி வெடித்து கலைத்தவர்களும் தற்பொழுது வானத்தில் நடக்கும் வண்ணஜாலமான வானவேடிக்கைகளை ஆங்காங்கே நின்று ரசிக்கும் நிகழ்வுகளும் அரங்கேறும்.


