in

இஸ்ரேலில் இறந்த நத்தம் வாலிபர்

இஸ்ரேலில் இறந்த நத்தம் வாலிபர்

 

இஸ்ரேலில் இறந்த நத்தம் வாலிபர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் – குடும்பத்தினர் கண்ணீர் மல்க அரசுக்கு வேண்டுகோள்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள மூங்கில்பட்டியை சேர்ந்த சுப்பையா என்பவரது மகன் வீரமணி(31). இவருக்கு புவனேஸ்வரி(25) என்ற மனைவியும், தேஜாஸ்ரீ(4) என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இஸ்ரேல் நாட்டிற்கு கட்டிட வேலைக்காக சென்றவர், கடந்த 6 மாதத்திற்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊரான மூங்கில்பட்டிக்கு வந்து விட்டு மீண்டும் இஸ்ரேல் நாட்டிற்கு சென்றார்.

இந்நிலையில் கடந்த மாதம் 27-ம் தேதி அங்கு கட்டிட வேலை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ராட்சத கிரேன் அவர் மீது சரிந்து விழுந்ததில் கிரேனின் அடியில் சிக்கிய வீரமணி உயிரிழந்தார்.

இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. இதனிடையே அவரது உடலை சொந்த ஊரான மூங்கில்பட்டிக்கு கொண்டு வரவும், அவரை இழந்த குடும்பத்திற்கு உரிய நிவாரணம் பெற்றுதரவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்துத் தர அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களி டையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

What do you think?

வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபை ஐப்பசி மாத ஜோதி தரிசனம்

தீபாவளி தொகுப்பு: முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்