தீப மலையின் உச்சியில் சிறப்பு பூஜை
கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக நடைபெற வேண்டி காவல்துறை சார்பில் மகா தீப மலையின் உச்சியில் சிறப்பு பூஜை…..
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீப திருவிழா நவம்பர் 15ம் தேதி அண்ணாமலையார் கோவில் தங்க கொடி மரத்தில் கொடி ஏற்று விழா நடைபெற உள்ளது.
இதனை தொடர்ந்து பத்து நாள் நடைபெறும் இந்த தீபத்திருவிழாவில் காலையிலும் இரவிலும் பஞ்ச மூர்த்திகள் மாடவீதி உலா நடைபெறும்.
இவ்விழாவின் முக்கிய நாளான பத்தாம் நாள் நவம்பர் 24ம் தேதி அதிகாலையில் கோயில் வளாகத்தில் பரணி தீபம் அன்று மாலையில் 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
இந்த தீபத் திருவிழாவுக்கு 30 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு மகா தீபம் தரிசனம் செய்ய உள்ளனர். இந்நிலையில் இந்த மகா தீபம் சிறப்பாகவும் நடைபெற வேண்டி காவல்துறை சார்பில் மலை உச்சியில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இன்று திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதயகுமார் தலைமையில் 25க்கும் மேற்பட்ட காவலர்கள் இன்று காலையில் 2668 அடி உயரம் உள்ள மலை உச்சிக்கு சென்று அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்கள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனை செய்தனர்.


