in

பேரிடர் காலங்களில் ஏற்படும் விபத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பேரிடர் காலங்களில் ஏற்படும் விபத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

மழை மற்றும் பேரிடர் காலங்களில் ஏற்படும் விபத்திலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்ளவும் மற்றும் பொதுமக்களை மீட்பது குறித்து தீயணைப்புத்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி….

மழை மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் பேரிடர் காலங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் பொதுமக்களை எவ்வாறு மீட்பு பணி செய்கிறார்கள் என்று தீயணைப்பு துறையினர் சார்பில் அண்ணாமலையார் கோவில் எதிரே பொதுமக்களுக்கு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் எதிரே திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் பேரிடர் காலங்களில் ஏற்படும் விபத்து குறித்தும் அதனை எவ்வாறு தடுக்க வேண்டும் எவ்வாறு பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.

குறிப்பாக தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறு ஏற்படும் பேரிடர் காலங்களில் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பாதிக்கப்பட்ட நபர்களை எவ்வாறு மீட்க வேண்டும் மீட்கப்பட்ட நபர்கள் உடனடியாக அவர்களுக்கு எவ்வாறு மருத்துவ சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகள் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தீயணைப்புத் துறையினர் மருத்துவத் துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து ஒத்திகை நிகழ்ச்சி நடத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

குறிப்பாக இந்த ஒத்திகை நிகழ்வு நடைபெறும் போது ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பேரிடர் காலத்தில் விபத்து ஏற்பட்டால் என்ன நிகழும் என்று உண்மையிலேயே நடித்து காண்பித்த சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பையும் பல்வேறு நபர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

What do you think?

கோவில் வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

அனைத்து வாகனங்களுக்கும் வர்ணம் தீட்டும் பணிகள் துவக்கம்