🌧️ நள்ளிரவில் வெளுத்து வாங்கிய கனமழை! சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர்!
நள்ளிரவில் 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
திருவண்ணாமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்திருந்தது இந்நிலையில் நேற்று நள்ளிரவில் திருவண்ணாமலை, வேங்கிக்கால், அடிஅண்ணாமலை, தேனிமலை, ஆடையூர், ஏந்தல், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக நேற்று இரவு அதிக கண மழை பெய்தது அதிகாலையில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஆறு போல் ஓடியது. இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்தோடு காணப்பட்ட நிலையில் நேற்று இரவு அதிக கண மழையைத் தொடர்ந்து அதிகாலையில் வெளுத்து வாங்கியது மழை.


