in

கனமழை எதிரொலி! பருவதமலை ஏற பக்தர்களுக்கு தடை!

🌧️🙏 கனமழை எதிரொலி! பருவதமலை ஏற பக்தர்களுக்கு தடை!

கனமழை காரணமாக பக்தர்களின் பாதுகாப்பு கருதி, பருவதமலை ஏறி சாமி தரிசனம் செய்ய இன்று ஒரு நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் தென் மகாதேவமங்கலம் பகுதியில் 4,560 அடி உயரம் கொண்ட பருவதமலை உச்சியில் அருள்மிகு பிரம்மராம்பிகை உடனுரை மல்லிகார்ஜுனஈஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.வார இறுதி நாட்கள்,அரசு விடுமுறை நாட்கள் மற்றும் பௌர்ணமி போன்ற நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பருவதமலை ஏறும் பக்தர்கள் நலன் கருதியும் மலையேறும் வழிப்பாதை மற்றும் மலை உச்சியில் ஒரே நேரத்தில் அதிகப்படியான கூட்ட நேரிசலை தவிர்க்கும் பொருட்டு பக்தர்கள் மலையேற தினசரி காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக 100 நபர்கள் என்ற அளவில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை முதல் கலசபாக்கம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது மற்றும் பருவதமலை அமைந்துள்ள பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.பக்தர்கள் பர்வத மலை ஏரி சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்றால் ஒரு ஓடையை கடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. தற்பொழுது பெய்து வரும் கனமழை காரணமாக அந்த ஓடையில் பக்தர்கள் செல்லாத அளவிற்கு தண்ணீர் செல்வதால் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வனத்துறையினர் இன்று ஒரு நாள் பருவதமலை ஏரி சாமி தரிசனம் செய்ய தடை விதித்துள்ளனர்.

மேலும் கடந்த ஆண்டு இதுபோன்று கனமழையினால் சென்னையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் அந்த ஓடையில் அடித்துச் சென்று உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அதன் எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறையினர் பக்தர்களை மலையேறி சாமி தரிசனம் செய்ய தடை விதித்துள்ளனர்.

What do you think?

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் மகிஷாசுர சம்ஹாரம் கோலாகலம்!

நள்ளிரவில் வெளுத்து வாங்கிய கனமழை! சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர்!