in

அனைவரும் வாக்களிக்க வேண்டும் வண்ணக் கோலங்களில் விழிப்புணர்வு உறுதிமொழி


Watch – YouTube Click

அனைவரும் வாக்களிக்க வேண்டும் வண்ணக் கோலங்களில் விழிப்புணர்வு உறுதிமொழி

 

வருகின்ற பாராளுமன்ற தேர்தலையொட்டி 19-4-2024 அன்று அனைவரும்  வாக்களிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் கடலூர் பஸ் நிலையத்தில் வண்ணக் கோலங்களில் விழிப்புணர்வு உறுதிமொழி பிரச்சாரம் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது.

இன்று கடலூரில் தேர்தல் பார்வையாளர்கள் திரு. பிரம்மா னத் பிரசாத் IRS மற்றும் தபஸ் லோத் IRS ஆகியோர் முன்னிலையில் கடலூர் பஸ்நிலையத்தில்
கடலூர் மாவட்ட ஆட்சியர் திரு அருண் தம்புராஜ் அவர்கள் தலைமையில் காவல்துறை கண்காணிப்பாளர் திரு ராஜாராம் டிஆர்ஓ ராஜசேகரன் ஆகியோர் இணைந்து 10 ஒன்றியங்களை சார்ந்த மற்றும் கடலூர் மாநகராட்சி குழுவினர் என 102 சுய உதவி குழவினர் 100 சதவித வாக்கு மற்றும் இந்திய வரைபடம்
வாக்கு அளிப்பது ஜனநாயக கடமை என விழிப்புணர்வு கோலங்களை கடலூர்
பஸ் நிலையத்தில் வண்ணக் கோலங்களில் வரைந்திருந்தனர்.

மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் காவல்துறை கண்காணிப்பாளர் டிஆர்ஓ மகளிர் திட்ட குழுவினர் உட்பட சுய உதவிக் குழுக்கள் ஆகியோர் இணைந்து கைகளை நீட்டி மக்களாட்சி மீது பற்றிய இந்திய குடிமக்களை ஆகிய நாம் நம்முடைய நலன் கருதும் மரபுகளை சுதந்திரமாகவும் நியாயமான மற்றும் அமைதியான தேர்தலில் மாண்பை நிலை நிறுத்துவோம் என்றும் ஒவ்வொரு தேர்தலும் அச்சமின்றியும் மதம் இனம் சாதி வகுப்பு மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் எந்த ஒரு தூண்டுதலுமின்றி வாக்களிப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர்.

 


Watch – YouTube Click

What do you think?

கோவையில் அண்ணாமலை தென்சென்னையில் தமிழிசை போட்டி

நான் வில்லத்தனமான நடிகை … யாரும் என்னை நெருங்கமாட்றாங்க.. ஷில்பா மஞ்சுநாத்