பிலிப்ஸ் ஸ்மார்ட் லைட் ஹப்பின் பிரத்யேக ஷோரூமை திறந்து வைத்த முதலமைச்சர்
புதுச்சேரியில் வேல்முருகன் எலக்ட்ரிகல்ஸ் துணை நிறுவனமாக பிலிப்ஸ் ஸ்மார்ட் லைட் ஹப்பின் பிரத்யேக ஷோரூமை முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்.

புதுச்சேரி உள்ள வேல்முருகன் எலக்ட்ரிக்கல்சின் துணை நிறுவனமாக பிலிப்ஸ் கம்பெனியின் ஸ்மார்ட் லைட் ஹப் பிரத்தியேக ஷோரும் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு புதிய பிலிப்ஸ் ஸ்மார்ட் லைட் ஹப்பை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
உடன் அமைச்சர் சிவக்கொழுந்து, தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு மற்றும் வேல்முருகன் எலெக்ட்ரிக்கல்ஸ் நிர்வாகிகளான குஞ்சிதம், வேல்முருகன், வசந்தமுருகன், பிலிப்ஸ் நிறுவன ஜெகதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர். தொழில் வணிகர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

இங்கு உலகத் தரம் வாய்ந்த பிலிப்ஸ் நிறுவனத்தின் சுழலும் வண்ண விளக்குகள் மற்றும் பிலிப்ஸ் உயர்தர சோலார் வீட்டு உபயோக விளக்குகள், பிலிப்ஸ் நிறுவனத்தின் நவீன லைட்ஸ் எல் இ டி பல்ப் வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.


