in

புதுச்சேரி ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவ பெருமாள் ஆலயத்தில் 55-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

புதுச்சேரி ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவ பெருமாள் ஆலயத்தில் 55-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

  புதுச்சேரி: புதுச்சேரி ராமகிருஷ்ணா நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவ பெருமாள் ஆலயத்தில், 55-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா, இந்த ஆண்டும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவின் தொடக்க நிகழ்வாக இன்று சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு திருமஞ்சனம், ஹோமம் மற்றும் பெருமாளின் பல்வேறு வாகன சேவைகள் நடைபெற உள்ளன.

விழாவின் முக்கிய நிகழ்வுகளாக 19-ஆம் தேதி கருட சேவை, 20-ஆம் தேதி சேஷ வாகனம், 21-ஆம் தேதி கருட சேவை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

மேலும், 26-ஆம் தேதி ஸ்ரீ ஹயக்ரீவ ஜெயந்தியை முன்னிட்டு திருத்தேர் மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சிகளும், 27-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது.

விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள், வேத பாராயணம், பஜனை மற்றும் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

பிரம்மோற்சவ விழாவையொட்டி ஆலய நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்ய உள்ளனர்.

What do you think?

புதுச்சேரியில் உணவு தானிய மானியம் CBDC முறையில் வழங்கல்; கைப்பேசி எண்ணை இணைக்க அறிவுறுத்தல்

மக்களை பாதிக்கும் தொழிற்சாலை அமைக்கக் கூடாது; காஞ்சிபுரம் ஆட்சியரிடம் பால்நல்லூர் ஊராட்சி தலைவர் மனு