in

மக்களை பாதிக்கும் தொழிற்சாலை அமைக்கக் கூடாது; காஞ்சிபுரம் ஆட்சியரிடம் பால்நல்லூர் ஊராட்சி தலைவர் மனு

மக்களை பாதிக்கும் தொழிற்சாலை அமைக்கக் கூடாது; காஞ்சிபுரம் ஆட்சியரிடம் பால்நல்லூர் ஊராட்சி தலைவர் மனு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் ஒன்றியம் பால்நல்லூர் ஊராட்சியில், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி, ஊராட்சி மன்ற தலைவர் நேரு தலைமையில் பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், வல்லம் வடகால் சிப்காட் பகுதியில் ஸ்பின்ஸ் ஷாப்டெக் நிறுவனம் ஏற்கனவே செயல்பட்டு வருவதாகவும், அந்த தொழிற்சாலையில் இருந்து நச்சுப் புகை வெளியேறுவதுடன், துர்நாற்றமும் வீசுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், அதே நிறுவனம் பால்நல்லூர் கிராமப் பகுதிக்கு அருகாமையில் இரண்டாவது தொழிற்சாலையை அமைக்கும் பணியை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே செயல்பட்டு வரும் தொழிற்சாலையால் புகை மற்றும் துர்நாற்றம் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், புதிய தொழிற்சாலை அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் உடல்நலம் மேலும் பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

எனவே, பால்நல்லூர் கிராமத்திற்கு அருகில் பொதுமக்களை பாதிக்கும் வகையில் புதிய தொழிற்சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், உரிய அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

புதுச்சேரி ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவ பெருமாள் ஆலயத்தில் 55-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

மதுரையில் தவெக சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி