அரசு பள்ளியில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரசு பள்ளியில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்திய நாட்டு நலத்திட்ட பணி கல்லூரி மாணவிகள்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு. போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள், உடல்நல பிரச்சனை, குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி. நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை பெரிய குளத்தில் உள்ள அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியின் நாட்டு நலத்திட்ட மாணவிகள் பங்கேற்று நடத்தினர்.
மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உதவி பேராசிரியர் பங்கேற்று போதை பழக்கத்தால் உடல் பாதிப்பு அதனுடன் தொடர்ந்து மனநல பாதிப்பு புள்ளி தேவைகளை விளக்கி கூறினார்.

மேலும் நாட்டு நலத்திட்ட பணி கல்லூரி மாணவிகள் மகிம் எனப்படும் சைகை மொழியில் போதை வழக்கத்திற்கு ஆளாகும் மாணவ மாணவியர் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என செய்து காண்பித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்வில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.


