in

30 ஆண்டுகளாக சென்று வந்த அரசு பேருந்து சேவை திடீரென மாற்றப்பட்டுள்ளதால்

30 ஆண்டுகளாக சென்று வந்த அரசு பேருந்து சேவை திடீரென மாற்றப்பட்டுள்ளதால்

ஆடி அமாவாசையை முன்னிட்டு தங்கம்மாள்புரம் பகுதி வழியாக உப்புத்துறை பகுதி வரை 30 ஆண்டுகளாக சென்று வந்த அரசு பேருந்து சேவை திடீரென மாற்றப்பட்டுள்ளதால்

சதுரகிரி மலை கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மட்டுமின்றி தங்கம்மாள்புரம் பகுதி வழியாக ஆடி அமாவாசையை முன்னிட்டு உப்புத்துறை மாளிகைப்பாறை புது கருப்பசாமி கோவில், பச்சைமலை பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கு செல்லும் 20க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்

               

தேனி மாவட்ட நிர்வாகம் தலையிட்டு வழக்கமான வழிதடத்திலேயே அரசு பேருந்து சேவையை இயக்க வேண்டுமென கோரிக்கை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா விற்கப்பட்ட உப்புத்துறை பகுதியில் பிரசித்தி பெற்ற மாளிகைப்பாறை கருப்பசாமி கோவில்களும், பச்சமலை பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் மற்றும் மலைப்பகுதி வழியாக ஆடி அமாவாசைக்காக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் செல்வதற்காகவும் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்களும் செல்லும் நிலையில்  இந்த உப்புத்துறை பகுதிக்கு கடமலைக்குண்டு மயிலாடும்பாறையில் இருந்து தங்கம்மாள்புரம் வழியாக கடந்த 30 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து சேவை திடீரென கடந்த இரண்டு நாட்களாக ஆடி அமாவாசைக்காக நிறுத்தப்பட்டுள்ளதால் இந்த தங்கம்மாள்புரம் பகுதி வழியை பயன்படுத்தி உப்புத்துறை பகுதிக்கு செல்லும் 2ஒ0க்கும் மேற்பட்ட மலை கிராம மக்களும் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென போக்குவரத்து துறை இந்த பேருந்து சேவையை நிறுத்தி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ள மலை கிராம மக்கள் பக்தர்கள் இதே வழித்தடத்தில் மீண்டும் பேருந்து சேவை துவக்கப்பட வேண்டும் என்றும்
இதற்கு தேனி மாவட்டம் நிர்வாகம் தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை எடுத்துள்ளனர்

What do you think?

கதறி அழுத சுகாதார செவிலியர் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டு

அருள்மிகு செல்லாண்டியம்மன்ஆலய கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு