in

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷ வழிபாடு

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷ வழிபாடு

 

செஞ்சி அருணாச்சலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷ வழிபாடு…
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பீரங்கிமேடு பகுதியில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ள அருள்மிகு அபிதகுஜாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில், புரட்டாசி மாத பிரதோஷ வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி, காலையில் மூலவர் அருணாச்சலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து மாலை பிரதோஷ வேளையில், நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பன்னீர், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் நந்தி பகவான் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகர், சிம்ம வாகனத்தில் மேளதாளங்கள் முழங்க கோவில் வளாகத்தில் ஊர்வலமாக வலம் வந்தார்.

இந்த பிரதோஷ வழிபாட்டில் செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

What do you think?

திடீர் மின்வெட்டு: நோயாளிகள், செவிலியர்கள் அவதி

திருவாவடுதுறை அபிஷேகத் திருநாள் நூல் வெளியீடு விழா