செஞ்சி மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரம் பூபல்லக்கு திருவிழா
செஞ்சி மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு பூபல்லக்கு திருவிழா … திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…..
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மலர் தொடு வியாபாரிகள் சார்பில் செஞ்சி பேரூராட்சி அலுவலகம் எதிரில் அமைந்துள்ள கிருஷ்ணாபுரம் ஸ்ரீ மாரியம்மனுக்கு 38 -ஆம் ஆண்டு ஆடிபூரத்தை முன்னிட்டு பூ பல்லக்கு பெருவிழா இரவு நடைபெற்றது.
இதை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு மூலவர் ஸ்ரீ மாரியம்மனுககு பால் தயிர் சந்தனம் விபதி,பன்னீர்,தேன், பஞ்சாமிர்தம் போன்ற வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்ட அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 9 மணிக்கு செஞ்சி அருள்மிகு அங்காளம்மன் ஆலயத்தில் இருந்து அக்னி சட்டி ஊர்வலமும், 10 மணிக்கு அங்காளம்மன் ஆலயத்தில் இருந்து 108 பால்குடம் ஊர்வலமாக கொண்டு வந்து மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மாலை மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜைகளும் நடைபெற்றது .
இதையடுத்து இரவு 9.30 மணிக்கு விநாயகர் ஸ்ரீ மாரியம்மன் முருகருக்கு பலவித மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூப்பல்லக்கு ரத்தத்தில் எழுந்தருளினர்.
தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீப ஆராதனை கட்டப்பட்டு மேளதாளம் முழங்க பூப்பல்லக்கு வீதி உலா காட்சி நடைபெற்றது.
செஞ்சி பேரூராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற பூப்பல்லாக்கு திருவிழாவை முன்னிட்டு செஞ்சி காந்தி பஜார்,மற்றும் திருக்கோவிலில் எதிரே அமைந்துள்ள குளத்திலும், வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு மின் ஒளி விளக்கில் ஜொலித்த ஸ்ரீ மாரியம்மன் கோயில் ஆடிப்பூரம் பூபல்லக்கு திருவிழாவில் செஞ்சி மலர் தொடு வியாபாரிகள் மற்றும் கிருஷ்ணாபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோயில் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

