in

அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

 

செஞ்சியில் மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.

பொன்பத்தி ஊராட்சி அஞ்சாஞ்சேரி கிராமத்தில், குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்து வரும் நிலையில் இது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பொன்பத்தி ஊராட்சி அஞ்சாஞ்சேரி கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இவர்களின் வீடுகளில் கடந்த சில மாதங்களாக குறைந்த மின்னழுத்தத்தில் மின்சாரம் விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்மோட்டார், மின்விசிறி உள்ளிட்ட பல்வேறு மின்சாதனங்கள் அடிக்கடி பழுதடைந்து வருவதால் அஞ்சாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தில் நேரில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் கிராம மக்கள் செஞ்சி-விழுப்புரம் சாலையில் செஞ்சி தீயணைப்பு நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த செஞ்சி போலீசார் மற்றும் செஞ்சி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுமதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி 15 நாட்களுக்குள் குறைந்த மின்னழுத்த பிரச்சினை சரிசெய்து தரப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

What do you think?

நாகை மாவட்டத்தில் புதிய கட்டிடங்கள் திறப்பு

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்