in

புரட்டாசி பிரம்மோற்சவ பெருவிழா  கருடசேவை புறப்பாடு

புரட்டாசி பிரம்மோற்சவ பெருவிழா  கருடசேவை புறப்பாடு

 

கிருஷ்ணாபுரம் ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவ பெருவிழா 5ம் நாள் கருடசேவை புறப்பாடு. கோவிந்தா கோஷங்களுடன் திரளான பக்தா்கள் சுவாமி தாிசனம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வைணவ திருக்கோயில்களில் கிருஷ்ணாபுரம் ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோயிலும் ஒன்றாகும்.

இத்திருக்கோயில் 16 ஆம் நூற்றாண்டில் கட்டிடக்கலையுடன் கட்டப்படடது. மூலவராக ஸ்ரீ வெங்கடாசலபதி ஸ்ரீதேவி, பூமாதேவியோடு அருள்பாலி்க்கின்றாா். உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசன். திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தேவஸ்தானத்தின் கீழ் வைகானச ஆகம முறையில் தென்கலை சம்பிரதாயத்தில் பூஜைகள் நடைபெறுகின்றன.

இத் திருக்கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவ பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகின்றது. அதன் தொடக்கமாக கடந்த 23ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது.

11 தினங்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் திருநாளான இன்று கருடசேவை நடைபெற்றது. இன்று காலை திருக்கோவில் நடை திறக்கப்பட்டு காலை சந்தி பூஜைகள் நடைபெற்று பெருமாள் காலை புறப்பாடும் அதனை தொடா்ந்து அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.

மாலையில் சாயரட்சை பூஜைகள் முடிவடைந்ததும் ஸ்ரீ ஸ்ரீனிவாசரை பொியதிருவடியான கருடாழ்வாா் மீது ஏழுந்தருளச் செய்தனா். தொடா்ந்து வண்ண மலா் மாலைகளாலும், ஆபரணங்களாலும் அலங்காரம் நடைபெற்றது.

இரவில் ஸ்ரீனிவாசா் கருட வாகத்தில் ஏழுந்தருளி காட்சி அளித்தபடி குடைவரை வாயில் தீபாராதனையுடன் வீதி புறப்பாடு நடைபெற்றது. கோவிந்தா கோஷங்களுடன் திரளான பக்தா்கள் சுவாமி தாிசனம் செய்தனா்.

வருகின்ற 2ம் தேதி திருவிழாவின் சிகர நிகழ்வான திருத்தோ் நிகழ்வு நடைபெறுகின்றது. திருவிழா ஏற்பாடுகளை அருள்மிகு சுப்பிரமணிசுவாமி திருக்கோவில் இணைஆணையா், நிா்வாகத்தினா் மற்றும் உபயதாரா்கள் செய்திருந்தனா்.

What do you think?

நெல் நாற்று நடவு பணியில் ஈடுபடும் வட மாநிலத் தொழிலாளர்கள்

குடிநீர் வழங்கிடக் கோரி கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்