in

விஜய் அரசியலுக்கு வருவது குறித்து யோசித்து தான் செய்திருப்பார்


Watch – YouTube Click

விஜய் அரசியலுக்கு வருவது குறித்து யோசித்து தான் செய்திருப்பார்

 

விஜய் அரசியலுக்கு வருவது குறித்து யோசித்து தான் செய்திருப்பார், எனக்கு அரசியல் ஆசை கிடையாது, என்னைப் பற்றி அவதூறு பரப்புவதற்கு சமூக வலைதளங்களில் செய்யும் செலவை என்னிடம் கொடுத்தால் முதியோர்களுக்கு மருந்து வாங்கி கொடுக்கலாம் பிரபல நகைச்சுவை நடிகரும் சமூக ஆர்வலருமான குக் வித் கோமாளி பாலா பேட்டி 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த லட்சுமிபுரத்தில் தனியார் பள்ளி ஆண்டு விழா யூத் அண்ட் இந்தியா என்ற தலைப்பில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அயோத்தி திரைப்பட இயக்குனர் திரு மந்திரமூர்த்தி, பிரபல நகைச்சுவை நடிகரும் சமூக ஆர்வலருமான குக் வித் கோமாளி பாலா ஆகியோர் பங்கேற்று பேசினர். பாலாவுடன் பள்ளி சிறுவர் சிறுமியர் போட்டி போட்டுக் கொண்டு செல்பி எடுத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாலா, தான் தொடர்ந்து மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஆம்புலன்ஸ்கள் வாங்கி தந்துள்ளதாகவும், இதுவரை ஐந்து ஆம்புலன்ஸ்கள் வாங்கிய நிலையில் மீதமுள்ள ஐந்தையும் விரைவில் வாங்கி தருவேன் என்று தெரிவித்தார்,

நடிகர் விஜய் அரசியல் ஆரம்பித்தது குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர், விஜய் எதை செய்தாலும் யோசித்து தான் செய்வார் என்றும், தனக்கு அரசியல் ஆசை எதுவும் கிடையாது, என்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதற்கு நிறைய செலவு செய்கின்றனர், அதை என்னிடம் கொடுத்தால் முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு மருந்து மாத்திரை வாங்கி தர முடியும் என்று தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மினி மரத்தான் போட்டி

ஆட்சியர் அலுவலகத்திற்குள் திரண்ட நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்கள்