in

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மினி மரத்தான் போட்டி


Watch – YouTube Click

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மினி மரத்தான் போட்டி

 

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மினி மரத்தான் போட்டியில் 1500 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

புதுச்சேரி மண்ணாடிபட்டு தனியார் பள்ளி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. தனியார் பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்க மீன் மரத்தான் போட்டியை பள்ளியின் சேர்மன் அருண் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

ஐந்து கிலோ மீட்டர் வரை நடைபெற்ற மினி மாரத்தான் போட்டி மூன்று பிரிவுகளில் நடைபெற்றது.

இந்த போட்டியில் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் தன்னார்வலர்கள் என ஆறு வயது முதல் 16 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொண்டனர்.

தனியார் பள்ளியில் இருந்து புறப்பட்ட மினி மாரத்தான் போட்டி போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருக்கனூர் கடைவீதி உள்ளிட்ட நகர முழுவதும் 5 கிலோமீட்டர் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி
மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.

இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் மினிமரத்தான் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுகளையும் சான்றிதழ்களையும் திருக்கனூர் ஆய்வாளர் ராஜ்குமார் வழங்கினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மன்னாடிபட்டு தனியார் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

இதுகுறித்து காவல் ஆய்வாளர் ராஜ்குமார் கூறும் போது…

மாணவர்கள் போதை பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என வலியுறுத்தும் வகையில் மினி மரத்தான் நடைபெற்றுள்ளது மேலும் கடை வீதியில் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த போட்டியில் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் என்று நம்புவதாகவும் போதை பொருளை ஒழிக்க இளைஞர்கள் முன் வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


Watch – YouTube Click

What do you think?

படத்தைப் பார்த்துட்டுப் படுத்தா, கேவலமான கனவுகள் தான் வருது… கொந்தளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்

விஜய் அரசியலுக்கு வருவது குறித்து யோசித்து தான் செய்திருப்பார்