in

‘பர்த் மார்க்’ மூவி ரிவியூ …ரசிகர்களின் விருப்பதிற்கு முடிவை விட்ட டைரக்டர்

‘பர்த் மார்க்’ மூவி ரிவியூ …ரசிகர்களின் விருப்பதிற்கு முடிவை விட்ட டைரக்டர்

ராணுவ வீரரான ஷபீர் கல்லரக்கல் கதாநாயகி மிர்னாவை திருமணம் செய்து கொள்கிறார். கர்ப்பம் அடைந்த மிர்னா குழந்தையை இயற்கையான முறையில் பெற்றெடுக்க கேரளா அருகே உள்ள வனப்பகுதிக்கு ஷபீர் அழைத்து செல்கிறார்.

அங்கிருக்கும் வைத்தியசாலையின் சுற்றுச்சூழல் மிர்னாவுக்கு பயத்தை கொடுக்கிறது. அடிப்படை வசதியான ஆம்புலன்ஸ் வசதி கூட இல்லாத சூழ்நிலை நினைத்து மிர்னா பயப்படுகிறார்.

திடீரென்று ரபேல் இது என்னுடைய குழந்தை அல்ல உன்னுடைய குழந்தை தான் என்று அதிர்ச்சி அளிக்கிறார். .படம் ஆரம்பிக்கும் பொழுதே நாயகன் மற்றும் நாயகி இருவரும் கண்ணை கட்டிக்கொண்டு காட்டில் ஒருவரை ஒருவர் பார்க்காமல் திருமணம் செய்து கொள்கின்றனர்.

மலைப்பாதையில் அவர்களை ஒரு ஊமைப் வேலைக்காரர் கூட்டி செல்கிறார், பிரசவத்திற்காக ஒரு கிராமத்தில் நுழையும் ஷபீர் மற்றும் மிர்னா அங்கு ஏதோ தவறு நடப்பதாக மிர்னா மட்டும் சந்தேகம் அடைகிறார்.

அங்கு பிரசவத்திற்காக அவரும் மருத்துவச்சி மிர்னாவை சில பூஜைகளில் கலந்து கொள்ளச் செய்து, கிராமத்தில் தயாரிக்கப்பட்ட உணவு அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

அந்த இடத்தை விட்டு வெளியேற விரும்பும் மிர்னாவை கட்டாயப்படுத்தி தங்க வைக்கும் கணவரின் மேல் சந்தேகம் வருகிறது. கணவருக்கு உளவியல் ரீதியான பிரச்சனை இருப்பதை உணரும் மிர்னா கணவரின் இந்த பிரச்சனைக்கு காரணம் என்ன.

காட்டு பகுதியில் அவர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் நல்லபடியாக குழந்தை பெற்றாரா போன்ற கேள்விக்கு தான் மீதி கதை பதில் அளிக்கிறது. பல வருடங்கள் கழித்து வீடு திரும்பும் ராணுவ வீரனின் மனநிலை எப்படி இருக்கும் சந்தேகம் பயம் காதல் என்று பல்வேறு உணர்ச்சிகளை அற்புதமாக கொட்டி ஷபீர் நடித்திருக்கிறார்.

ஒரு பக்கம் மனைவியின் மீது அளவு கடந்த காதல் மறுபக்கம் மனரீதியான பிரச்சனை என்று இரண்டு உணர்ச்சிகள் இடையே மாட்டிக் கொண்டு தவிக்கும் தருணத்தில் தனது நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

கர்ப்பிணியாக நடித்திருக்கும் மிர்னா கணவன் தன் மீது சந்தேகம் படும் பொழுதும், உடல் ரீதியாக அவர் படும் வேதனைகளையும் தன் முகபாவனையுடன் கண்ணீரையும் சேர்த்து அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். தாய்மார்களின் உணர்வுகளை அசைத்துப் பார்த்திருக்கிறார். இயக்குனர் இவர்களுடன் வேலைக்காரராக பயணிக்கும் வாய் பேச முடியாமல் தன் நடிப்பு முழுவதையும் முக அசைவிலேயே பிரதிபலிக்கிறார் இந்திரஜித்.

இவர்களுடன் தீப்தி, பொற்கொடி, பி.ஆர்.வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகரின் இசையில் அமைந்த பாடல் மற்றும் பின்னணி இசை அற்புதமாக கதைக்கு ஒரு உயிரோட்டத்தை கொடுத்திருக்கிறது.

உதய் தங்கவேல் வின் ஒளிப்பதிவில் காட்டு பகுதிகளை அற்புதமாக பதிவு செய்து இருக்கிறார். விக்ரம் ஸ்ரீதரன் கணவன் மனைவியிடையே இருக்கும் பிரச்சனையை வெளியே சொல்லாமல் உளவியல் ரீதியாக வெளியே சொல்லி பிரச்சனைக்கான தீர்வையும் ரசிகர்களையே தேடச் சொல்லி இருப்பது தான் இப்படத்தின் ஹைலைட்.

திரைகதையில் சற்று கவனம் செலுத்தி சுவாரசியத்தையும் லாஜிக்கையும் கூட்டி இருந்தால் படம் அற்புதமாக இருக்கும். சைக்காலஜிக்கல் திரில்லரான படத்திற்கு ஏன் ஆங்கில டைட்டில் வைத்தார் என்று தான் தெரியவில்லை ஒரு ஆவணப்படத்தை பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. அனைத்து வகை ரசிகர்களை இப்படம் கவருமா என்பதில் சந்தேகம் தான்.

What do you think?

பூங்கா திறப்பு விழா

கரூர் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடரில் வாயில் கருப்பு துணி கட்டி, கருப்பு சட்டை அணிந்து பங்கேற்பு