in

திமுக அரசு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது வைகைச்செல்வன் பேச்சு


Watch – YouTube Click

திமுக அரசு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது வைகைச்செல்வன் பேச்சு

 

திமுக அரசு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதால், ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்.

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஆர்.ஆர். நகரில் தேமுதிக வேட்பாளர் பெ. சிவநேசனை ஆதரித்து திங்கள்கிழமை இரவு பிரசாரம் செய்த அவர் பேசியது:

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக திமுக ஆட்சி செய்கிறது. பாசிச சக்தி படைத்த இந்த அரசு தமிழக மண்ணில் எந்தவிதமான மாற்றத்தையும் நிகழ்த்தவில்லை.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஆதரவு திமுகவுக்கு இருந்தது. அவர்களுக்கு திமுக வாக்குறுதி அளித்துவிட்டு ஏமாற்றிவிட்டது. திமுக மீது அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஒட்டுமொத்தமாக வெறுப்புடன் உள்ளதால், அவர்கள் அதிமுக பக்கம் நிற்கின்றனர். அவர்களுடைய வாக்குகள் தேமுதிகவின் கொட்டு முரசு சின்னத்துக்கு உண்டு.

அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் எனக் கூறிவிட்டு, தகுதியான பெண்களுக்கு மட்டுமே என மாற்றினர். வாக்குகள் மட்டும் அனைத்து பெண்களிடமிருந்து திமுகவுக்கு வேண்டும். ஆனால், ஆயிரம் ரூபாய் தகுதியான பெண்களுக்கு மட்டும் எனக் கூறுகின்றனர். இதனால், வெறுப்பில் உள்ள தாய்மார்கள் அதிமுகவு கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனர்.

எங்களது கூட்டணிக்கு வருமாறும், இல்லாவிட்டால் கட்சி உடைக்கப்படும் எனவும் எடப்பாடி பழனிசாமியிடம் பாஜக மிரட்டியும் அச்சுறுத்தியும் பார்த்தது. ஆனால், எத்தனை இடர்பாடுகள், துயரங்கள் வந்தாலும் பரவாயில்லை எனக் கூறி துணிச்சலாகச் செயல்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு இஸ்லாமியர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் அதிமுகவுக்கு இருக்கிறது.

இத்தொகுதியில் அது கொட்டு முரசுக்குக் கிடைக்கும். இதேபோல, ஆண்டாண்டு காலம் அதிமுகவுக்கு ஆதரவாக உள்ள கிறிஸ்தவர்களின் வாக்குகளும் கொட்டு முரசுக்கு விழும்.

திமுக ஆட்சியில் சொத்து வரி, பால், பேருந்து கட்டணம், குடிநீர் கட்டணம் உள்ளிட்டவை உயர்த்தப்பட்டுவிட்டது. விலைவாசி உயர்வை இந்த அரசு கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. இதனால், ஏழை, நடுத்தர மக்கள், விளிம்பு நிலை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இவர்களின் ஒட்டுமொத்த வாக்குகளும் அதிமுகவுக்கு இருக்கிறது.

இப்படிப்பட்ட ஆட்சிக்கு மரண அடியுடன் கூடிய தீர்ப்பைத் தர வேண்டும். எனவே, இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியைச் சார்ந்த தேமுதிகவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் வைகைச்செல்வன்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக அமைப்புச் செயலர் ஆர். காந்தி, நிர்வாகிகள் துரை. திருஞானம், என்.எஸ். சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

போளூரில் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான 2 ஆம் கட்ட பயிற்சி

இப்தார் விழாவில் 500 பேருக்கு தலைவாழை இலை போட்டு அறுசுவை விருந்து