in

77 வயதான நடிகர் அடடே மனோகர் மரணம்


Watch – YouTube Click

77 வயதான நடிகர் அடடே மனோகர் மரணம்

அடடே மனோகர் அவர்கள் தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நிம்மதி உங்கள் சாய்ஸ், ரமணி வெர்சஸ் ரமணி, சின்ன மாப்பிள்ளை பெரிய மாப்பிள்ளை, போன்ற ஏராளமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர்.

தனியார் துறையில் வேலை செய்த இவர் சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தால் சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார். தூர்தர்ஷனில் இவர் நடித்த அடடே மனோகர் என்ற நிகழ்ச்சி மூலம் முரளி மனோகர் என்ற பெயர் மாறி இவருக்கு அடடே மனோகர் என்ற பெயர் வந்தது எஸ்வி சேகர், கிரேசி மோகன் ஆகியோர் இயக்கிய இந்த நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர்.

அடடே மனோகர் இதுவரை 33 நாடகங்களுக்கு மேல் நடித்துள்ளார். 77 வயதான இவர் உடல்நலம் கோளாறு காரணமாக நடிப்பிலிருந்து விலகியவர் நேற்று இரவு உயிரிழந்தார்.

சென்னை குமரன் சாவடியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்கு இன்று நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் தங்களது அஞ்சலியை தெரிவித்து வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

நான் பாஜக செல்வேன் என கூறியவனை செருப்பால்…. திருச்சி எம்பி கோபத்துடன் பேட்டி

செயின் மற்றும் மோதிரத்தை மாற்றிய ரஜினி…எதற்காக?