தேனியில் ஜெயிலர்2 படம் ஆரவாரத்துடன் கொண்டாடிய ரசிகர்கள்
தேனியில் ஜெயிலர் படம் வெளியானதை முன்னிட்டு ரசிகர்கள் தியேட்டர் முன்பு பட்டாசுகளை வெடித்து ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்கத்தில் வெளியானது.
இதன் ஒரு பகுதியாக தேனி வெற்றி திரையரங்கில் ஜெயிலர் 2 படம் வெளியானதை முன்னிட்டு படத்தை பார்ப்பதற்கு காலை முதலே ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக வருகை தந்து ஆரவாரத்துடன் படம் வெளியானதை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

தியேட்டர் முன்பு பட்டாசுகளை வெடித்து தங்களது முயற்சிகளை வெளிப்படுத்தி ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
மகன், மகளுடன் குடும்பமாக வருகை தந்து படம் பார்க்க ஆர்வத்துடன் சென்றனர்.


