in

‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்கு வந்த புதிய சிக்கல்! இணையத்தில் பரவும் வீடியோ!

‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்கு வந்த புதிய சிக்கல்! இணையத்தில் பரவும் வீடியோ!

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தைச் சுற்றி தற்போது புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

திரையரங்குகளில் வெளியான இப்படம், விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் ஓடிடி வெளியீட்டிற்கு முன்பாகவே படத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருவதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, படத்தின் காட்சிகளைப் பகிர்ந்து சிலர் விமர்சனங்களையும், மீம்ஸ்களையும் வெளியிட்டு வருகின்றனர். இதனால் மீண்டும் நயன்தாரா ட்ரோலுக்கு ஆளாகியுள்ளார்.

ஏற்கனவே படத்தைப் பற்றிய பல்வேறு விமர்சனங்கள் இணையத்தில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்த வீடியோ விவகாரமும் பேசுபொருளாகியுள்ளது.

உண்மையிலேயே படம் இணையத்தில் கசிந்துவிட்டதா? அல்லது சில காட்சிகள் மட்டும்தான் பகிரப்பட்டு வருகின்றனவா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஓடிடி வெளியீட்டிற்கு முன்பே இப்படம் சர்ச்சையில் சிக்கியிருப்பது சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

 தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கார்த்திகை மாத சங்கடகஹரசதுர்த்தி

நாடு முழுவதும் ‘Nasha Mukt Yuva – Sundays on Cycle’ நிகழ்ச்சி