in

பஞ்சமுக விநாயகர் கோவில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு!

பஞ்சமுக விநாயகர் கோவில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு!

 

ஓசூர் சாந்தி நகர் ஸ்ரீ பஞ்சமுக விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு!

பல்வேறு திரவியங்களால் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் – பக்தர்கள் சுவாமி தரிசனம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சாந்தி நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பஞ்சமுக விநாயகர் திருக்கோவிலில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதையொட்டி, விநாயகருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகப் பெருமானை வழிபட்டு, தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

சங்கடங்கள் நீங்கி, குடும்பத்தில் நலமும் வளமும் பெருக வேண்டும் என பக்தர்கள் பக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

செஞ்சி முருகன் திருக்கோவில் திருவிளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு

தமிழ் மண் பாதுகாப்பு இயக்கம்  கொடி அறிமுகம்