in

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு!

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு!

 

ஓசூர் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு!

பல்வேறு மூலிகைப் பொருட்களால் அம்மனுக்கு அபிஷேகம் – வண்ண வண்ண மலர்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதையொட்டி காலையில் அம்மனுக்கு பல்வேறு மூலிகைப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு வண்ண வண்ண மலர்களால் அழகிய அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றன.

பின்னர் அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.

What do you think?

குத்தாலத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

ஜே.சி.பி மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள் 3 நாள் அடையாள வேலைநிறுத்தம்