திமுக இளைஞரணி செயலாளர் பிறந்தநாளை ஒட்டி நலத்திட்ட உதவி
திமுக இளைஞரணி செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பிறந்தநாளை ஒட்டி குத்தாலம் மற்றும் மங்கைநல்லூரில் திமுகவினர் இனிப்பு வழங்கி கேக் வெட்டி நலத்திட்ட உதவி வழங்கினர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் இளைஞரணி செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பிறந்த நாளை ஒட்டி பேருந்து நிலையம் அருகில் திமுக சார்பில் கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம் தலைமையில் பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து பின்னர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

இதேபோன்று மங்கைநல்லூரில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.
இதில் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர் அடுத்த தமிழக முதல்வர் உதயநிதி என முழக்கமிட்டனர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

