in

கார்த்திகை மாதம் முதல் சோமவாரம் சிறப்பு யாக பூஜை

கார்த்திகை மாதம் முதல் சோமவாரம் சிறப்பு யாக பூஜை

 

கார்த்திகை மாதம் முதல் சோமவாரம் குத்தாலம் ஆதிசக்தி அம்பாள் சமேத மன்மதீஸ்வரர் ஆலயத்தில் சங்காபிஷேகம் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேருந்து நிறுத்தம் அருகே அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஆதிசக்தி அம்பாள் சமேத மன்மதீஸ்வரர் சுவாமி ஆலயத்தில் கார்த்திகை மாதம் முதல் சோமவாரத்தை ஒட்டி சங்காபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக கோவில் வளாகத்தில் சங்குகள் வைக்கப்பட்டு யாக பூஜை நடைபெற்றது யாக பூஜை நடைபெற்று பூர்ணாஹுதி உடன் கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது சங்குகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபாடு செய்தனர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

What do you think?

தினக்கூலி தொழிலாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது தனியார் அறக்கட்டளை நிர்வாகம்

என்எல்சி நிறுவனம் அலட்சியம் வாகன ஓட்டிகள் அவதி