சீர்காழி அருகே கூரை வீடு தீப்பற்றி எரிந்து மூதாட்டி பலி
மயிலாடுதுகணவர் அப்துல் ஜலீஸ் 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையில் அவரறை மாவட்டம் சீர்காழி அருகே கீராநல்லூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் நூர்ஜகான்.60. இவரது து மகள் நிஷா பேகம்.44. திருமணமாகி கணவர் சாதிக் பாட்ஷாவுடன் ஊட்டியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் உறவினர்கள் உதவியுடன் கூரை வீட்டில் தனியே வசித்து வந்த நூர்ஜகான் நேற்று இரவு சமைத்து சாப்பிட்டுவிட்டு இரவு வீட்டில் படுத்து உறங்கியுள்ளார் இன்று அதிகாலை 3 மணி அளவில் அவர்கள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சென்று பார்த்தபோது நூர்ஜகான் வீடு தீப்பற்றி எரிந்துள்ளது.
வீட்டில் கதவு உள்பக்கம் தாழிடப் பட்டிருந்ததால் நூர்ஜகானை மீட்க முடியவில்லை தகவல் அறிந்து சீர்காழி தீயணைப்பு மீட்பு படையினர் செல்வதற்குள் வீடு முழுமையாக எரிந்தவுடன் தீயில் கருகி நூர்ஜகான் பரிதாபமாக உயிரிழந்தார்.
நூர்ஜகான் வீடு எவ்வாறு தீ பற்றியது என்பது குறித்து சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


