கடலூரில் நீலம் இ.வி. கான்செப்ட் ஸ்டோர் திறப்பு விழா
கடலூரில் நீலம் இ.வி. கான்செப்ட் ஸ்டோர் திறப்பு விழா – மின்சார வாகன விற்பனை மற்றும் சேவை மையம் தொடக்கம்..
கடலூரில் மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், நீலம் இ.வி. (NEELAM EV) நிறுவனத்தின் புதிய கான்செப்ட் ஸ்டோர் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

கடலூர் – புதுச்சேரி சாலையில் உள்ள சின்ன கானாகனங்குப்பம், பொதுப்பண்ணி நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த விற்பனை மையத்தை, சேத் இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்குதாரர் திரு. ராஜேஷ் சேத் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தென்னிந்திய FIRD அமைப்பின் பிராந்தியத் தலைவர் டாக்டர் எம். ஜெயசங்கரன் கலந்து கொண்டார். விழாவில் தொழில்துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் மற்றும் விருந்தினர்கள் பங்கேற்றனர்.
லூதியானாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சேத் இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷனின் மின்சார வாகனப் பிராண்டான நீலம் இ.வி., அவ்ரோமா குளோபல் கனெக்ட் நிறுவனத்துடன் இணைந்து தென்னிந்தியாவில் தனது விற்பனை மற்றும் சேவைப் பிரிவை விரிவுபடுத்தியுள்ளது.

இந்த மையத்தில் மின்சார ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் மின்சார சைக்கிள்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.
மேலும், வாடிக்கையாளர்களுக்கு தரமான விற்பனைக்குப் பிந்தைய சேவை, தொழில்நுட்ப உதவி மற்றும் உதிரிபாகங்கள் கிடைப்பதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தென்னிந்தியாவில் மின்சார வாகனச் சந்தையை விரிவுபடுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய மையம், சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என நிறுவன நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


