மாதர் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்
தஞ்சையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து மாதர் சங்கத்தினர் காய்கறி சிலிண்டர் ஆகியவற்றுடன் நூதன ஆர்ப்பாட்டம்.
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், அரிசி, பருப்பு, காய்கறிகள், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து, இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் தஞ்சையில் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர.
தஞ்சை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விலையேற்றத்தால் ஏழை, எளிய மக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினர்.

மேலும், காய்கறிகள், அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களைச் சிறு பொட்டலங்களாகக் கட்டி மாலையாகக் கோர்த்து கழுத்தில் அணிந்தபடி, விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.


