in

ராகவா லாரன்ஸ் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம்

ராகவா லாரன்ஸ் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம்

 

சிறுவயதில் முதல் அண்ணாமலையார் கோவிலுக்கு வரும் போது பார்த்தாலே போதும் என்று எண்ணத்தில் வர தொடங்கியதாக தெரிவித்த நடிகர் ராகவா லாரன்ஸ்……..

தனது பிறந்தநாளில் நடிகர் ராகவா லாரன்ஸ் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம்…..

தனது பிறந்தநாளில் நடிகர் ராகவா லாரன்ஸை வாழ்த்திய சாதுக்கள் மற்றும் சன்னியாசிகளுக்கு அன்னதானம் வழங்கினார்.

தமிழ் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது பிறந்த நாளில் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு தனது தம்பி மற்றும் குடும்பத்தினரோடு சாமி தரிசனம் செய்தார்.

அண்ணாமலையார் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தபோது சிவனடியார்கள் நடிகர் ராகவா லாரன்ஸை தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற அண்ணாமலையார் போற்றி பாடல்களை பாடி நடிகர் ராகவா லாரன்ஸை வாழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து அம்மணி அம்மன் கோபுரத்திற்கு வெளியே வந்த நடிகர் ராகவா லாரன்ஸை சாதுக்கள் வாழ்த்தினார். அதனைத் தொடர்ந்து சேஷாத்ரி ஆசிரமம் மற்றும் ரமணா ஆசிரமத்தில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து சேஷாத்திரி ஆசிரமம் வெளியே அன்னதானமும் வழங்கினார்.

தனது சிறுவயதில் அண்ணாமலையார் கோவிலுக்கு வரும்போது வேண்டுதல் எதுவும் வைக்க மாட்டேன் அவரை பார்த்தாலே போதும் என்ற ஆவலோடு கோவிலுக்கு வருவேன் என்றும், காஞ்சனா 4 விரைவில் வெளிவர இருப்பதாகவும் அவருடைய தம்பி நடிகர் எல்வின் நடித்த புல்லட் திரைப்படம் விரைவில் வெளிவர இருப்பதாகவும், தொடர்ந்து பென்ஸ் படமும் விரைவில் வர இருப்பதாக தெரிவித்தவர்.

What do you think?

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்க தயாராகும் 500 கிலோ கேக்

மாதர் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்