in

அம்பாசமுத்திரத்தில் ‘ஜெயிலர் 2’ கொண்டாட்டம்

அம்பாசமுத்திரத்தில் ‘ஜெயிலர் 2’ கொண்டாட்டம்

 

அம்பாசமுத்திரத்தில் ‘ஜெயிலர் 2’ கொண்டாட்டம் – திரையரங்கு முன்பு ரசிகர்கள் உற்சாக நடனம்!

வயதைக் கடந்தும் குறையாத ரஜினி மோகம் – முதிய ரசிகர் முதல் இளைஞர்கள் வரை ஆர்வம்!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பாலாஜி திரையரங்கில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் முதல் காட்சி இன்று காலை 10.30 மணிக்குத் தொடங்கியது. திரைப்படத்தைக் காண ஏராளமான ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்தனர்.

திரையரங்கின் முன்பு ரஜினிகாந்தின் பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், ரசிகர்கள் உற்சாகமாக நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனால் திரையரங்கு முன்பு கொண்டாட்டம் களைகட்டியது.

குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகனத்தில் வந்த வயதான ரசிகர் ஒருவர் திரைப்படம் பார்க்கச் சென்ற காட்சி கவனம் ஈர்த்தது.

இளம் நடிகர்களின் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் பேனர்கள் வைத்து கொண்டாடும் நிலையில், ரஜினிகாந்தின் ரசிகர்களும் தலைமுறைகள் கடந்தும் தங்களது அபிமானத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற இந்தக் கொண்டாட்டம், ரஜினிகாந்த் மீதான ரசிகர்களின் நீடித்த ஈர்ப்பைப் பறைசாற்றும் வகையில் அமைந்தது.

What do you think?

ஜெயிலர்-2 ரிலீஸ் கேக் வெட்டி இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் கற்பக விருட்ச வாகன புறப்பாடு