ஜெயிலர்-2 ரிலீஸ் கேக் வெட்டி இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர்-2 இன்று ரிலீஸ் – மயிலாடுதுறையில் கோயிலில் அபிசேக ஆராதனை செய்து கேக் வெட்டி இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் 2 திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் இரண்டு திரையரங்குகளில் ஸ்கீரின்களில் திரைப்படம் வெளியாகியுள்ளது.
திரைப்படம் வெளியானதை முன்னிட்டு மயிலாடுதுறையில் உள்ள திரையரங்குகளில் ரஜினிகாந்த் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி, ரஜினிகாந்த் நீடுழி வாழ கோயிலில் சிறப்பு அபிசேகம் பாலாபிஷேகம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


