வரதட்சனை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி
வரதட்சனையை எதிர்த்து பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி வரதட்சனை எதிர்ப்பு தின நாளை முன்னிட்டு இன்று மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரதட்சினை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட மகளிர் நல அலுவலர் பிரபா முன்னிலை வகித்தார் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

முன்னதாக வரதட்சனை எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது பள்ளி மாணவ மானவிகள் கலந்து கொண்ட இந்த விழிப்புணர்வு பேரணி மூங்கில் தோட்டம் வழியாக தருமபுரத்தை சென்றடைந்தது.
வழியெங்கும் வரதட்சனையை எதிர்த்து விழிப்புணர்வு முழக்கம் செய்தனர். பேரணியில் 200 க்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


