சுய உதவி குழு பெண்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி
தரங்கம்பாடி அருகே பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து டி எம் ஐ அருட்சகோதரிகள் தலைமையில் சுய உதவி குழு பெண்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ராஜூபுரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து பெண்கள் பாதுகாப்பு வலியுறுத்தியும் வரதட்சணை பொருளாதார வன்முறை மன உளைச்சல் பாலியல் வன்முறை ஆகியவற்றை கண்டித்தும் வன்முறைக்கு எதிராக ஒன்றுபடுவோம் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பொறையார் அருகே ராஜூவ்புரத்திலிருந்து தரங்கம்பாடி டி எம் ஐ மையம் வரை பேரணி நடைபெற்றது.
இதில் டி.எம்.ஐ அருட்சகோதரிகள் தலைமையில் நடைபெற்ற பேரணியில் சுய உதவி குழு பெண்கள் ஏராளமானோர் கலந்து கண்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்தும் பெண்கள் பாதுகாப்பு வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கையில் பதாகையை ஏந்தி முழக்கமிட்டு சென்றனர்.


