in

வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் ஸ்டிராங் ரூம் ஆய்வு


Watch – YouTube Click

வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் ஸ்டிராங் ரூம் ஆய்வு

 

புதுச்சேரியில் வாக்குபதிவு செய்த இயந்திரங்கள் வைக்கப்படும் ஸ்டிராங் ரூம் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான குலோத்துங்கன் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

புதுச்சேரியில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்கு எண்ணும் மையம் மற்றும் ஸ்டிராங் ரூம் இருக்கும் இடங்களான லாஸ்பேட்டை அரச பெண்கள் பொறியியல் கல்லூரி மற்றும் மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றிற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான குலோத்துங்கன் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். தேர்தலை எவ்வாறு நடத்துவது, பாதுகாப்புகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

மேலும் வாக்கு பதிவு செய்யப்பட்ட வாக்கு இயந்திரங்கள் வைக்கப்படும் ஸ்டிராங் ரூம் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். சிசிடிவி கேமிராக்களை பொருத்தி கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான குலோத்துங்கன், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருவதாகவும், வாக்க எண்ணும் மையத்தில் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்துள்ளோம்.

தேர்தலுக்கான பயிற்சிகள் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. தேர்தலுக்கு முன்பு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கும். தேவையான அளவுக்கு துணை ராணுவப்படையினர் வருவார்கள் என கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரியில் 10 பேர் கொண்ட விபசார கும்பல் அதிரடி கைது

புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன்கடைகளை மீண்டும் திறக்கோரி போராட்டம்