in

மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் துவங்குகிறது


Watch – YouTube Click

மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் துவங்குகிறது

 

மீன்களின் இனப்பெருக்கத்திற்காக கிழக்கு கடலோர மாநிலங்களில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவு முதல் துவங்குகிறது.

இதையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் பூம்புகார், தரங்கம்பாடி, வானகிரி, திருமுல்லைவாசல், பழையாறு, சந்திர பாடி, சின்னங்குடி உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் 27 கிராமங்களை சேர்ந்த 1000 விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்படுகிறது.

இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட விசைப்படகுகளை துறைமுகத்தில் நங்கூரம் இட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

மேலும்  61 நாட்களுக்கு கரையில் இருக்கும் மீனவர்கள் படகுகளை பழுதுபார்த்தல், வலைகளை சீரமைத்தல், வர்ணம் பூசுதல் போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபடுவர். இதற்கான ஆயத்த பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். மீன்பிடி தடை காலம் காரணமாக ஆடு கோழி போன்ற மற்ற இறைச்சிகளுக்கு மவுசு அதிகரிக்கும்.


Watch – YouTube Click

What do you think?

பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் மோடி திண்டுக்கல் ஐ லியோனி சாடல்

தேர்தல் பத்திரத்துடன் தேர்தலை சந்திப்பவர்கள் தோற்பார்கள் திருச்சியில் கி வீரமணி பேட்டி