in

ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் புதுச்சேரி அமைச்சர் பி ஆர் என்‌ திருமுருகன் பங்கேற்பு


Watch – YouTube Click

ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் புதுச்சேரி அமைச்சர் பி ஆர் என்‌ திருமுருகன் பங்கேற்பு

 

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே கோவில்பத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன் மற்றும் ஸ்ரீ ராஜயோக பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது.

கோயிலில் 22 ஆம் ஆண்டு அக்னி சட்டி வசந்த திருவிழா நேற்று இரவு பூச்சொரிதல் மற்றும் கொடி ஏற்றத்துடன் வெகு விமர்சையாக துவங்கியது.

ஏழை மாரியம்மன் ஆலயத்தில் இருந்து சக்தி கரக புறப்பாடு மேளதாள இன்னிசையோடு நடைபெற்றது. தொடர்ந்து கொடி மரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு அனுமன் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது.

பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பூ கொண்டு அம்மனுக்கு மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. பின்னர் சிறப்பு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் புதுச்சேரி மாநில அமைச்சர் பி.ஆர்.என்‌. திருமுருகன், ஆலய நிர்வாகி வி.என். செங்குட்டுவன் உள்ளிட்ட பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

விழாவில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அம்பாள் திருக்கல்யாணம் இன்று இரவும், நாளை தவசுமர ஊர்வலம் மற்றும் கர்ணமோட்சம் நிகழ்வும், மே 8ஆம் தேதி அக்னி சட்டி வசந்த உற்சவம் நடைபெறுகிறது.


Watch – YouTube Click

What do you think?

பிரமாண்டமாக இந்திரஜா திருமணத்தை செய்ய இது தான் காரணம் …ரோபோ ஷங்கர்

கஸ்டமர் கேர் வேலை கேட்ட இளைஞர் – சிரித்து கொண்டே பதிலளித்த பெண் அதிகாரி