in

அதிமுக ஆட்சியின்போது கூட்டுறவு வங்கியில் ரூ 4 50 கோடி கையாடல்


Watch – YouTube Click

செஞ்சி அருகே அதிமுக ஆட்சியின்போது சத்தியமங்கலம் கூட்டுறவு வங்கியில் ரூ.4.50 கோடி கையாடல் செய்த அதிமுகவை சேர்ந்த வங்கித் தலைவர், துணைத்தலைவர் உட்பட 5 பேர் கைது செய்யபட்டுள்ளனர்

2016-2021 வரையிலான அதிமுக ஆட்சியின் போது விவசாயக் கடன், நகைக்கடன் உள்ளிட்டவற்றில் இந்த முறைகேடு நிகழ்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேவுள்ள சத்தியமங்கலம் தொடக்க கூட்டுறவு வேளாண்வங்கியில் கடந்த 2016 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியின் போது அப்போது இருந்த வங்கியின் தலைவர் சாந்தி, துணைத்தலைவர் அருள்மேரி செயலாளர் மற்றும் ஊழியர்கள் பசுமலை, முருகன், விஜயராஜ் ஆகியோர் வாடிக்கையாளர்கள் விவசாய கடன், நகைக்கடன் பெற்றது போல போலீயான ஆவணங்களை தயாரித்து ரூ.4.50 கோடி டெபாசி பணத்தை கையாடல் செய்ததாக புகார் இருந்தது.

அதனை தொடர்ந்து திண்டிவனம் கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் சொர்ணலட்சுமி ஆய்வு மேற்கொண்டார்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் வணிக குற்ற் புலனாய்வு போலீசார் 6 பேர் மீது மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.

இதில் வங்கியின் செயலாளர் இறந்த நிலையில், மீதமுள்ள 5 பேர் கைது செய்யபட்டுள்ளனர்.இச்சம்பவம் செஞ்சி சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செஞ்சி சுற்றியுள்ள அனைத்து கிராம வங்கிகளில்  போலி ஆவணங்களை வைத்தும், கவரிங் நகைகளை வைத்தும் ஊழல் நடந்து இருக்குமோ என பொதுமக்கள் சந்தேகப்படும் சூழ்நிலையில் அதிகாரிகள் அனைத்து வங்கிகளிலும் ஆவணங்களை பரிசோதனை செய்ய வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

அதிமுக கொடி சின்னத்தை தொண்டர்கள் பயன்படுத்த தடை ஏதும் இல்லை

ஜாக்டோ ஜியோ சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த ஆயத்த மாநாடு