in

ஜாக்டோ ஜியோ சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த ஆயத்த மாநாடு


Watch – YouTube Click

கரூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த ஆயத்த மாநாடு- தமிழக அரசு இதுவரை பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்கவில்லை என குற்றச்சாட்டு.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த ஆயத்த மாநாடு மாவட்டத் தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் அரசு ஊழியர் ஆசிரியர்கள் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசை வலியுறுத்தியும் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை தமிழ்நாடு முதல்வர் நிறைவேற்ற வலியுறுத்தி ஆயத்த மாநாடு நடைபெற்றது மேலும் 15, 02, 2024 ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும் என தெரிவித்தனர்.

இது குறித்து ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் ஞானத்தம்பி கூறுகையில்:

மாநாட்டினுடைய பிரதான கோரிக்கை புதியதாக வேலைக்கு சேர்ந்துள்ளார் ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தமிழகத்தில் இருக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் தொகுப்பூதியத்தில் மதிப்பு புதியதில் இருக்கக்கூடிய சத்துணவு ஊழியர்கள் ஊட்டச்சத்து ஊழியர்கள் எம் ஆர் பி சி ஊழியர்கள் என மூன்று லட்சத்திற்கு மேலான பணியாற்றி வருகின்றனர் இவர்களுக்கு நிரந்தரமான காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும், தமிழகத்தில் ஆறரை லட்சம் அரசு பணியிடம் என்பது காலியாக உள்ளது அந்த பணியிடங்களை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் நிரப்ப வேண்டும், பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது அரசு செவி சாய்க்கவில்லை அதனால் நாங்கள் வேலை நிறுத்த போராட்டம் பணிகளை செய்து வருகிறோம் தமிழக அரசு இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை, அதனால் தான் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

அதிமுக ஆட்சியின்போது கூட்டுறவு வங்கியில் ரூ 4 50 கோடி கையாடல்

சாத்தூர் அருகே நின்று கொண்டிருந்த கார் மீது லோடு வேன் மோதி விபத்து