in

இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றி பெறும் என அமைச்சர் நேரு பேட்டி


Watch – YouTube Click

இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றி பெறும் என அமைச்சர் நேரு பேட்டி

இந்தியாவில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றி பெறும் என அமைச்சர் நேரு பேட்டி

திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம் திருவரம்பூர், புதுக்கோட்டை கந்தர்வகோட்டை என ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கியதாக உள்ளது. திருச்சி தொகுதியில் தி.மு.க கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ, அதிமுக சார்பில் கருப்பையா, பா.ஜ.க கூட்டணியில் அமமுக சார்பில் செந்தில் நாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜேஷ் உள்ளிட்ட 35 வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள்

திருச்சி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை ஆண் வாக்காளர்கள் 7,57,130 பெண் வாக்காளர்கள் 7,96,616 மூன்றாம் பாலினம் 239 பேர் என 15,53,985 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் 1665 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 84 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அங்கு வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. திருச்சி தொகுதியில் 8347 வாக்குப்பதிவு அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் முன்னதாக மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் உள்ள வாக்குச்சாவடி முகவர்கள் மாதிரி வாக்குப்பதிவு செய்தனர்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அமைச்சர்கே என் நேரு தில்லை நகர் மக்கள் மன்றத்திலும் வாக்கு செலுத்தினார்.

வாக்குப்பதிவை முன்னிட்டு நேற்று அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பட்டி இயந்திரங்கள் மை எழுதுகோல் உள்ளிட்ட வாக்களிக்க தேவையான அனைத்து உபகரணங்களும் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தியாவில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றி பெறும் என அமைச்சர் நேரு பேட்டி

அமைச்சர் நேரு வாக்களித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது…..

தமிழ்நாட்டில் இந்திய கூட்டணி 39 இடங்களையும் கைப்பற்றும். சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி தனது கோட்டை என சொல்கிறாரே என்ற கேள்விக்கு சேலத்தில் செல்வகணபதி நிச்சயம் வெற்றி பெறுவார். தமிழ்நாட்டில் பாஜக டெபாசிட் இழப்பார்களா என்ற கேள்விக்கு அதற்கு நான் பதில் சொல்ல முடியாது மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்றார்.இந்தியா கூட்டணி பெரும்பான்மை இடங்களில் ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றி பெறும் .


Watch – YouTube Click

What do you think?

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் முக்கிய பிரபலங்களின் செய்தியாளர் சந்திப்பு

மக்கள் 5.30 மணி நேரத்துக்கு பின்பு வாக்களிக்க தொடங்கினர்