in

புதுச்சேரியில் இருந்து இருடியம் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு


Watch – YouTube Click

புதுச்சேரியில் இருந்து இருடியம் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு

 

புதுச்சேரி மாநில அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கோடிக்கணக்கான பணம் கையூட்டு பெறப்படுவதாக பலவேறு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து இருடியம் தொடர்ந்து கடத்தப்படுவதாக ஒரு பகீரங்க குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

அவர் ஏற்கனவே பிரதமர் அலுவலக மத்திய இணை அமைச்சராக இருந்தார். ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட்டுகள் விடும்போது அங்கு நேரில் செல்லும் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்படும் இணை அமைச்சராக இருந்தவர்.

இருடியம் என்பது உலகளவில் ராக்கெட் சம்பந்தமாக பயன்படுத்தும் ஒரு பொருளாக அறியப்படுகிறது. ராக்கெட் தயாரிப்பில் மிக மிக முக்கிய அவசியமான பொருளாக இருக்க கூடிய இந்த இருடியம் புதுச்சேரியில் இருந்து கடத்தப்படுவதாக ஒரு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

இது புதுச்சேரி மக்கள் மத்தியில் இருடியம் என்றால் என்ன? இருடியம் என்ற பொருள் புதுச்சேரியில் உற்பத்தி செய்யப்படுகிறதா? அல்லது போலி இருடியம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா? நாராயணசாமியின் குற்றச்சாட்டில் யார் யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது குறித்து மத்திய அரசு முதலில் திரு நாராயணசாமியிடம் நேரடி விசாரணை நடத்த வேண்டும்.

மத்திய நிதி துறை, சிபிஐ, இந்திய பாதுகாப்பு அமைச்சகம், அமலாக்கத்துறை, ஐபி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நாராயணசாமியுடம் விசாரிக்க வேண்டும்.

இல்லது இருடியம் திருடி விற்பது தொடர்பான தகவல்களை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி சிபிஐ உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளின் உயரதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

அந்த தகவல்களை பத்திரிக்கை வாயிலாக பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் நாராயணசாமியிடம் உள்ளது. நாட்டின் நலன் கருதி அவருக்கு தெரிந்த உண்மையை தெரிவிக்க வேண்டும்.

இது இருடியம் விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த கோரி சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட துறைகளுக்கு அதிமுக சார்பில் ஓரிரு தினங்களில் கடிதம் அனுப்பப்படும் என கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

பழனி கிரிவலப் பாதையில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் வள்ளி கும்மி நடனம் ஆடி வழிபாடு

தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டம்