in

குதிரை பேரத்தில் தவெக அரசு சிறப்பாக செயல்படுகிறது.. வானதி சீனிவாசன் பேட்டி…

குதிரை பேரத்தில் தவெக அரசு சிறப்பாக செயல்படுகிறது..
வானதி சீனிவாசன் பேட்டி…

 

3வயது குழந்தை முதல் 70 வயது வரை தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை… குதிரை பேரத்தில் தவெக அரசு சிறப்பாக செயல்படுகிறது..
வானதி சீனிவாசன் பேட்டி…

புதுச்சேரியில் பாஜக தலைமை அலுவலகத்தில் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், புதுச்சேரியில் பாஜக மைனாரிட்டியாக உள்ளது..சபாநாயகர் தேர்தல் மற்றும் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுகீடு செய்ய வேண்டியது முதல் அமைச்சர் ரங்கசாமி தான் என்றார்.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு திமுக ஆட்சியை போல் தொடர்கிறது…தூய சக்தி என கூறி கொண்டு பெண்கள் சிறப்பு படைக்கும்
பெயர் மாற்றம்- சீருடை மாற்றம் மட்டும் தான் நடந்துள்ளது….திமுகவிற்கும் தவெகவிற்கும் எந்த மாற்றமும் இல்லை.
3 வயது குழந்தை முதல் 70 வயது வரை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என
வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

பெரும்பான்மை கிடைக்காத அரசு அந்தந்த கட்சிகளில் நிலவும் குழப்பதை பயன்படுத்தி கொள்கிறது என்றும் குதிரை பேரத்தில் தவெக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்றும் மேகதாத் விவகாரத்தில் எந்த மாநில உரிமையும் பாதிக்க கூடாது என்றும் வானதி கூறினார்.

மாநில ஆளுநரை மக்கள் தாராளமாக மனு கொடுக்கலாம்.அதனை பாருங்கள் என ஆளுநர் கூறலாம்..இதை ஆளுநர் நிர்வாகத்தில் தலையிடுகிறார் என்பது தவறு..நதி சீரமைப்பது என்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்..அதனால் ஆளுநர் கவனம் செலுத்துவதில் தவறில்லை..அவரை கண்ணை மூடி கொண்டு மாளிகைக்கு போய் வர வேண்டுமா…? என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தவர்களுக்கு அரசியல் அனுபவமும் இல்லை..ஆட்சியில் இருந்தும் அனுபவமும் இல்லை..
அவர்களது செயல்பாடுகளை பார்க்கிறோம்.. தவெக மீது பாஜக Soft ஆக இல்லை என கூறிய வானதி சீனிவாசன்,  கஜானா காலி என விஜய் முதல் நாளே கை தூக்கி விட்டார்.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை..விவசாய கடனை தள்ளுபடி செய்ய முடியவில்லை ஊழலை ஒழிப்பேன் என மேடையில் விஜய் சினிமா வசனம் பேசுகிறார்..கீழே இறங்கி எதையும் செய்ய மறுக்கிறார்..

அரசு வழக்கறிஞர்களை நியமிக்க பணம் வாங்குவதாக தகவல் வந்துள்ளது.. இவர்கள் எப்படி நேர்மையாக செயல்படுவார்கள் ? என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.

அண்ணாமலை வெளியாறியதால் தமிழகத்தில் பாஜகவிற்கு பாதிப்பு இல்லை என வானதி தெரிவித்தார்.

What do you think?

புதுச்சேரி மணக்குள விநாயகர் ஆலய கும்பாபிஷேக பூர்வாங்க பணிகள் பாலாயணத்துடன் தொடங்கியது

நெய்வேலி என்எல்சி ராட்சத இயந்திரத்தால் போக்குவரத்து பாதிப்பு