in

தட்டாஞ்சாவடி தொகுதியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்தன் ஆய்வு

தட்டாஞ்சாவடி தொகுதியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்தன் ஆய்வு

தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட கொக்கு பார்க் மற்றும் வெங்கடேஸ்வரா நகர் பகுதிகள் வழியாக செல்லும் வாய்க்கால்களில், மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் மற்றும் தடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என அப்பகுதி மக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, தட்டாஞ்சாவடி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகியுமான திரு. அசோக் ஆனந்தன் அவர்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கொக்கு பாலம் பகுதியில் தேங்கியிருந்த மணல் மற்றும் கழிவுகளை உடனடியாக அகற்றவும், சேதமடைந்த மற்றும் அடைப்பு ஏற்பட்டிருந்த குழாய்களை சீரமைக்கவும் அதிகாரியிடம் கேட்டுக் கொண்டார்.

அதேபோல், வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் உடைந்திருந்த குழாய்களைப் பார்வையிட்டு, அவற்றை உடனடியாக சீரமைத்து, வரவிருக்கும் மழைக்காலத்தில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தடையின்றி வெளியேறும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மழைக்காலங்களில் பொதுமக்கள் எந்தவித சிரமமும் இன்றி பாதுகாப்பாக இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை பணிகளும் விரைந்து மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

What do you think?

மயிலாடுதுறை வேம்படி மாரியம்மன் கோவிலில் 24-ஆம் ஆண்டு பால்குடம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது

கோவை மாவட்டத்தின் நீலாம்பூர், கணியூர் மற்றும் கருமத்தம்பட்டி பகுதிகளில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்