in

தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததால் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்


Watch – YouTube Click

தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததால் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்

 

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அனைத்துத்துறை அலுவலர்களுடான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜான் டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில் வட்டாட்சியர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் காவல்துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த ஸ்டிக்கர்கள் புகைப்படங்கள் உடனடியாக அகற்றப்பட்டது அத்துடன் கண்காணிப்பு கேமராவுடன் கூடிய 9 பறக்கும் படை வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்வைத்தார்.

பின்னர் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஜான் டாம் வர்கீஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததை அடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வருகிறது.

வேட்பு மனுதாக்கல் மார்ச் 20 ஆம் தேதி துவங்கி 27 ஆம் தேதி வரையில் வேட்பு மனுவை திரும்ப பெற கடைசி நாள் 30 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை ஜுன் 4 ஆம் தேதி நடைபெறும் அரசு கட்டிடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பர விளக்கி கொள்ளப்படும் தனியார் கட்டிடங்களில் உள்ள அரசியல் புகைப்படங்கள் விளம்பரங்கள் 72 மணி நேரத்தில் விலக்கப்படும்.

மேலும் தேர்தல் குறித்த புகார்களையும் மக்கள் 0435 252594 என்ற தொலைபேசிக்கு கட்டுபாட்டு அறைக்கு தெரிவிக்கலாம். தேர்தல் சுதந்திரமாக நியாயமாக நடக்க அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம்.

651 வாக்குசாவடிகள் வேலூர் மாவட்டத்தில் உள்ளது இதில் 49 வாக்குசாவடிகள் பதட்ட நிறைந்த வாக்குசாவடிகளாகும் புதுவை தமிழக எல்லை சோதனை சாவடிகளில் தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

மது போதையில் பெற்ற மகள்களுக்கே பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது

1 1/2 லட்சத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்ததால் பரபரப்பு