in

அண்ணாமலையார் கோவிலில் தேவிஸ்ரீ சாகர் மனைவியுடன் சாமி தரிசனம்

அண்ணாமலையார் கோவிலில் தேவிஸ்ரீ சாகர் மனைவியுடன் சாமி தரிசனம்

 

பிரபல இசையமைப்பாளர் தேவிஸ்ரீ சாகர் தனது மனைவியுடன் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம்……

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அனுதினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதுமட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அனுதினமும் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பிரபல இசையமைப்பாளர் தேவிஸ்ரீ சாகர் தனது மனைவியுடன் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அண்ணாமலையார் கோவிலில் சம்பந்த விநாயகர் சன்னதி, அண்ணாமலையார் சன்னதி மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதி, நவகிரக சன்னதி உள்ளிட்ட பல்வேறு பிரகாரத்தில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சால்வை அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

What do you think?

விஜயை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த முயற்சி

மோகனூர் கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் சுவாசினி கன்னியா பூஜை